உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பருவம் தவறிய மழையால் பாதிப்பு

பருவம் தவறிய மழையால் பாதிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பால்கரையில் பருவம் தவறிய மழையால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.பால்கரை கிராமத்தலைவர் ெஷரிப் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், பால்கரையில் 1800 எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. அக்.,ல் விதைத்த பயிர் வளர்ந்து வரும் நிலையில் பருவம் தவறி டிச.,ல் தொடர் மழையால் தண்ணீர் தேங்கி பயிர்களுக்கு இடையே அதிகளவில் புற்கள் வளர்ந்துள்ளன. களைக்கொல்லி மருந்து அடித்தும் பலனில்லை. எனவே வேளாண் அதிகாரிகள், வருவாய்துறையினர் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை