உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு கம்பி சேதம்: விபத்து அபாயம்

ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு கம்பி சேதம்: விபத்து அபாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து துாத்துக்குடி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு கம்பி சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சந்திப்பு வழியாக துாத்துக்குடி, கீழக்கரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வகையில் அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலம் பெயரளவில் பராமரிக்கப்படுவதால் தடுப்புச்சுவரில் உள்ள கம்பிகள் சேதமடைந்து வெளியே நீட்டியுள்ளது. 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ளதால் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபத்திற்கு முன்னதாக சேதமடைந்துள்ள கம்பியை சீரமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி