இலந்தைகுளம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் சிரமம்
தேவிபட்டினம்: இலந்தைகுளம் ரோடு பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.தேவிபட்டினத்தில் இருந்து இலந்தை கூட்டம், சித்தார்கோட்டை வழியாக பனைக்குளம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. பல ஆண்டுகளாக இந்த ரோடு பராமரிப்பின்றி ரோட்டில் ஜல்லிகற்கள் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. லேசான மழை பெய்தாலே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். மேலும் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களும், ரோட்டை காரணம் காட்டி கூடுதல் வாடகை வசூல் செய்யும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இலந்தைக்கூட்டம் செல்லும் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.