மட்டியாரேந்தல் -சேமனுார் ரோடு சேதம்: மக்கள் அவதி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மட்டியாரேந்தல் - சேமனுார் ரோடு சேதமடைந்துள்ளது. மட்டியாரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கிராமத்தில் இருந்து சேமனுார் கிராமத்திற்கு செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தார் ரோடு அமைக்கப்பட்டது. முறையாக பராமரிப்பு இன்றி ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். இரவில் சுற்றிச் செல்லும் அவலநிலை உள்ளது. எனவே மட்டியாரேந்தல் - சேமனுார் செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.