பிரசவ வார்டுக்கு செல்லும் ரோடு சேதம்: கர்ப்பிணிகள் பாதிப்பு
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்பிரசவ வார்டுக்கு செல்லும் பகுதியில் பேவர் பிளாக் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரசவவார்டுக்கு செல்லும் பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கற்கள் சரியாக பதிக்கப்படாததால் மழையின் போது தேங்கிய தண்ணீர் காரணமாக கற்கள் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. பிரசவ வார்டுக்கு செல்லும் கர்ப்பிணிகள் மேடு பள்ளங்களில் தடுக்கி கீழே விழும் நிலை உள்ளது.வாகனங்கள் மேடு பள்ளங்களில் செல்லும் போது விபத்துக்குளாகும் நிலை உள்ளது.கர்ப்பிணிகளை பார்க்க வரும்பார்வையாளர்கள் குண்டும், குழியுமான பகுதியால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துபேவர் பிளாக் சாலையை சீரமைக்க வேண்டும்.