உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செவ்வூரில் சேதமடைந்த கால்வாய் ஷட்டர் பாலம்

செவ்வூரில் சேதமடைந்த கால்வாய் ஷட்டர் பாலம்

கிராம மக்கள் கவலைபரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் செவ்வூர் ஷட்டருடன் கூடிய கால்வாய் பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் வைகை ஆற்றில் 50 ஆண்டுகளுக்கு முன்பு மதகு அணை கட்டப்பட்டது. அப்போது வானம் பார்த்த பூமியாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய்கள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் விளை நிலங்கள் பயனடைவதுடன், அப்பகுதி கிராம மக்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்தது. இந்நிலையில் ஒவ்வொரு கிராம எல்லைகளை கடக்கும் போதும் வலது பிரதான கால்வாய்கள் மீது பாலங்கள் அமைக்கப்பட்டது. மேலும் சில கிராமங்களில் ஒட்டுமொத்த விளை நிலங்களுக்கும் செல்ல இந்த கால்வாய் பாலம் மட்டுமே வழியாக இருக்கிறது. இந்நிலையில் செவ்வூர், மென்னந்தி உட்பட பல்வேறு பகுதிகளில் கால்வாய் பாலங்கள் ஒட்டுமொத்தமாக சேதமடைந்துள்ளது. மேலும் ஷட்டர்கள் உடைந்துள்ளதால் தண்ணீரை முறையாக கொண்டு செல்ல முடியாமலும், கண்மாய்களில் தேக்க முடியாத சூழல் நிலவுகிறது. கோடையில் தண்ணீரின்றி கால்நடைகளையும் வளர்க்க முடியாத நிலை தான் உள்ளது. எனவே வைகையில் வரும் தண்ணீரை சேமித்து வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி