உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தினைக்குளத்தில் சேதமடைந்த நிலையில் குடிநீர் குழாய்கள் ரோட்டில் வீணாகிறது

தினைக்குளத்தில் சேதமடைந்த நிலையில் குடிநீர் குழாய்கள் ரோட்டில் வீணாகிறது

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தில் குழாய்கள் சேதமடைந்து காவிரி குடிநீர் வீணாகி வருகிறது.திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி நீர் மற்றும் உள்ளூர் கிணறுகளின் உதவியுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு அவற்றின் மூலமாக தினமும் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில் பல இடங்களில் குடிநீர் செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இவற்றை சரி செய்வதற்கான எந்த முயற்சியும் இல்லாததால் தண்ணீர் வீணாவது தொடர்கிறது. முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் வேணு ஸ்ரீ தமிழ் கூறியதாவது: தினைக்குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்கு பம்ப் ஆப்பரேட்டர் உள்ளார். இந்நிலையில் தனி அலுவலரின் நிர்வாகத்தில் ஊராட்சிகள் இயங்கி வரும் நிலையில் உடைப்பெடுத்து ஓடும் குழாய்களை சரி செய்வதற்கு எவ்வித நிதியும் ஒதுக்காமல் அப்படியே கிடப்பில் விட்டுள்ளனர். இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு தண்ணீர் வீடுகளுக்கு வினியோகம் செய்யும் போது வீணாக ரோட்டில் ஓடுகிறது.எனவே அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகளை செய்வதற்கு தனி அலுவலரின் நேரடி பார்வையில் உரிய பணிகளை செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ