உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியூரில் சேதமடைந்த பயணியர் நிழற்குடை

மாரியூரில் சேதமடைந்த பயணியர் நிழற்குடை

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூல் சேதமடைந்த நிலையில் பயணியர் நிழற்குடை உள்ளது. கடந்த 2001ல் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக கூரை பூச்சு உதிர்ந்து அடிக்கடி பெயர்ந்து விழுவதால் வெயில், மழை காலங்களில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிழற்குடை அருகே செல்வதற்கு அச்சமடைகின்றனர். மாரியூர் கோயிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். மாலை 6:00 மணிக்கு மேல் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் செல்வதால் வாலிநோக்கம், மேலமுந்தல், கீழமுந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் செல்கின்றன. இதனால் அதிக கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ