கால்வாயில் சேதமடைந்த சிறுபாலம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொசுக்குடிப்பட்டி கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கண்மாயில் இருந்து தண்ணீர் செல்வதற்காக வரத்து கால்வாய் வசதி உள்ளது. கிராம மக்கள் ஊருணி தண்ணீரை பயன்படுத்துவதற்காக வரத்து கால்வாயை கடந்து செல்ல பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுபாலம் அமைக்கப்பட்டது.தற்போது பாலத்தின் துாண்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது.இவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.