உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த கால்நடை மருத்துவமனை

சேதமடைந்த கால்நடை மருத்துவமனை

கடலாடி: சேதமடைந்த நிலையில் கடலாடி தாலுகா கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது.1990ல் கட்டப்பட்ட ஓட்டு கட்டடத்தில் கால்நடைகள் மருத்துவ பரிசோதனை கூடம் உள்ளது. கடலாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்காக இங்கு வருகின்றனர். இந்நிலையில் சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டடத்தால் விபத்து அபாயம் உள்ளது. கடலாடி பா.ஜ., ஒன்றிய வர்த்தக அணி தலைவர் மூர்த்தி கூறியதாவது: ஓட்டு கட்டடத்தின் தாங்கும் திறன் கொண்ட துாண்கள் சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் உட்பகுதிக்குள் தண்ணீர் தேங்கி விடுகிறது. மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ