அரசு கல்லுாரிகளில் முதுநிலை பாடப்பிரிவு துவங்க தீர்மானம்
கமுதி: கமுதியில் அகில இந்தியபார்வர்டு பிளாக் கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. தேசிய செயலாளர்கள் சுரேஷ்தேவர், ஜெயராமன், இளைஞரணி அமைப்பு செயலாளர் சப்பாணி முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் லெட்சுமணன் வரவேற்றார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து சுற்றுலா தலமாக்க வேண்டும். கடலாடி, முதுகுளத்துார், கமுதி தாலுகாவில் உள்ள ஆறுகள், வரத்துகால்வாய், கண்மாய்களில் உள்ள சீமைக் கருவேலம் மரங்களை அகற்றி மராமத்து செய்யவேண்டும்.கமுதி தேவர் நினைவுக் கல்லுாரி, கடலாடி, முதுகுளத்துார், திருவாடனை உள்ளிட்ட அரசு கல்லுாரிகளில் கூடுதலாக புதிய பாடப் பிரிவுகள், முதுநிலை பாடப்பிரிவுகள் துவங்க வேண்டும்உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.