உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாய்கள் கடித்து மான்கள் பலி

நாய்கள் கடித்து மான்கள் பலி

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கண்மாய்களில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. அவை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதும், அவற்றை நாய்கள் கடிப்பதும் தொடர்கிறது. நேற்று அஞ்சுகோட்டை கரையக்கோட்டையில் இரண்டு வயது பெண் புள்ளிமான் திரிந்தது. அந்த மானை நாய்கள் விரட்டி கடித்ததில் பலியானது. கால்நடை மருத்துவர் பரிசோதனையில் மான் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. உடல் புதைக்கப் பட்டது. அதே போல் நெய்வயல் இலுப்பக்குடி கிராமத்திற்குள் புகுந்த ௨ வயது பெண் புள்ளி மானை நாய்கள் கடித்து விரட்டியது. அவற்றுக்கு பயந்து மான் ஓடியதில் ஒரு வீட்டின் சுவற்றில் மோதி பலியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை