70 வயதானவர்களுக்கு 10 சதவீதம்கூடுதல் ஓய்வூதியம் தர கோரிக்கை
ராமநாதபுரம்: தமிழகத்தில் 70 வயதானவர்ளுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர் வலி யுறுத்தினர். ராமநாதபுரத்தில் மாவட்ட அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில் டிச.,17 ல் ஓய்வூதியர் தினவிழா நடந்தது.சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் வரவேற்றார். மத்திய அரசின் 8 வது ஊதியக்குழுவின் பலன்களை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். 70 வயதானவர்ளுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க இணைச்செயலாளர் செங்குட்டுவன், கவுரவ ஆலோசகர் சேசுராஜ் , பொருளாளர் முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, சவுந்திரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் சீதாலெட்சுமி நன்றி கூறினார்.