உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்வாய்க்குள் பதிக்காத காவிரி நீர் குழாய்களை அகற்ற கோரிக்கை

கால்வாய்க்குள் பதிக்காத காவிரி நீர் குழாய்களை அகற்ற கோரிக்கை

திருவாடானை : காவிரி நீர் திட்டத்திற்கு பதிக்கப்பதற்காக, குழாய்கள் கால்வாய்க்குள் இறக்கி வைக்கபட்டதால் தண்ணீர் ஓட வழியில்லாமல் தேங்கியிருக்கிறது. அவற்றை அகற்றிட அதிகாரிகள் முன்வர வேண்டும்.மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை முதல் தொண்டி வரை பல்வேறு இடங்களில் ஏராளமான குழாய்கள் இறக்கி வைக்கபட்டுள்ளன. இதில் கடம்பாகுடி அருகே மழை நீர் செல்லும் கால்வாய்க்குள் குழாய்கள் இறக்கி வைக்கபட்டதால் தண்ணீர் ஓட வழியில்லாமல் தேங்கியிருக்கிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஒரு ஆண்டுக்கு முன்பு இக் குழாய்கள் இறக்கி வைக்கபட்டது. இன்னும் பணிகள் துவங்கவில்லை. கடம்பாகுடியில் மழை நீர் செல்லும் கால்வாய்க்குள் இறக்கி வைக்கபட்டதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கியிருக்கிறது. பருவமழை துவங்கியுள்ளதால் வரும் நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் தண்ணீர் செல்ல வாய்ப்பில்லாமல் பாதிப்பு அதிகமாகும். எனவே கால்வாயில் இருக்கும் குழாய்களை பாதுகாப்பான வேறுஇடத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ