உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

ராமநாதபுரம், : ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாம்பனில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மாவட்ட ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தசுவாமிகள், மாவட்டச் செயலாளர் கண்ணன் சிவா, மாநில துணைத்தலைவர் வழிவிட்டான் உள்ளிட்ட குழுவினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர். இதில் புனித ஆன்மிக ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு ஏராளமான யாத்ரீகர்கள் வருகின்றனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் தாலுகாவிற்குள் மதுக்கடை இருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாம்பனில் டாஸ்மாக் கடை இருப்பதால் மது அருந்திவிட்டு வாகனங்களில் தாறுமாறாக வரும் நபர்களால் விபத்துக்கள் நடக்கிறது. எனவே பக்தர்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி பாம்பன் பகுதியில் உள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தினர். ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார், ஹரி சிவன் அடியார் திருமடம் கணேசன் சுவாமிகள், நகர் தலைவர் பாண்டி, ஆத்மராமர் கோயில் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை