மேலும் செய்திகள்
ரேஷன் கடை கவலைக்கிடம் புதிதாக அமைக்க கோரிக்கை
22-Oct-2024
கீழக்கரை, : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஏர்வாடியில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டடம் அகற்றப்பட்டது.ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 1997ல் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதியில் மழை, வெயிலுக்கு ஒதுங்கும் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது குறித்து அக்.14ல் படத்துடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.ஏர்வாடி, வெட்டன்மனை, நடுத்தெரு, சேர்மன் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேறு வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கி வருகின்றனர்.ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சேதமடைந்த ரேஷன் கடை 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி இடிபாடுகளுடன் இருந்தது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் வேறு வழியின்றி ஒதுங்கும் போது விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இது குறித்தும், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டட வேண்டும் என வலியுறுத்தி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை சேதமடைந்த ரேஷன் கடை கட்டடம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
22-Oct-2024