உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேகமாக பரவுகிறது டெங்கு

வேகமாக பரவுகிறது டெங்கு

ராமநாதபுரம் ; ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் நவ.,ல் இதுவரை 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் மழையால் நீர்த் தேக்கங்கள், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரில் உருவாகும் டெங்கு கொசுக்களால் மக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் டெங்கு காய்ச்சலில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்டனர். தற்போது இந்த மாதத்தில் 14 நாட்களில் 13 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறிந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் டெங்கு பரவாமல் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை