கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த டெ்டனேட்டர்,ஜெலட்டின் குச்சிகள்
தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடி கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஜெலட்டின் குச்சிகள், 10 டெட்டனேட்டரை போலீசார் கைப்பற்றினர். புதுக்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக சிலர் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு தொண்டி போலீசார் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் சுற்றியவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பிச் சென்றனர்.சந்தேகமடைந்த போலீசார் கடற்கரையில் ஒரு இடத்தை தோண்டி பார்த்த போது 10 ஜெலட்டின் குச்சிகள், 10 டெட்டனேட்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பது வழக்கமாக நடக்கிறது. எனவே கைப்பற்றபட்ட ஜெலட்டின், டெட்டனேட்டர் வெடி வைத்து மீன்பிடிக்க பயன்படுத்த முயற்சியா என போலீசார் விசாரிக்கின்றனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.