உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடர் விடுமுறையால் ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையால் ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: போக்குவரத்து நெரிசல்

ராமேஸ்வரம்: சரஸ்வதி, ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை, சரஸ்வதி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் வாகனங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். இவர்களின் வருகையால் நேற்று ராமேஸ் வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. நெரிசலை தவிர்க்க தமிழக அரசு அறிவித்து உள்ள புறவழிச் சாலை திட்டப் பணியை விரைவில் துவக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் இங்குள்ள தனியார், அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் தங்கும் விடுதிகளில் அக்., 5 வரை ரூம்கள் இல்லாமல் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் அறைகள் கேட்டு அலைந்த வண்ணம் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை