உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். ஹிந்துகோயில் பூஜாரிகள் பேரவை மாநில துணைத் தலைவர் கோதாவரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். இதில், ராமநாதபுரம் நொச்சியூருணி அருகேயுள்ள பிரம்ம புரீஸ்வரர் கோயில் பலநுாறு ஆண்டுகள் மிகவும் பழைமை வாய்ந்தது. இங்கு திருப்பணிகள் முடிந்து பல ஆண்டு களாகியும் இதுவரை கும்பாபிேஷகம் நடத்தவில்லை. ஆகையால் புதிததாக பழமை மாறாமல் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். அதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலி யுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ