உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தை அமாவாசையில் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் புனித நீராடல்

தை அமாவாசையில் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் புனித நீராடல்

ராமேஸ்வரம்:தை அமாவாசை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், நேற்று தை அமாவாசையில், ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி, பக்தர்கள் முதலில் புரோகிதர்கள் மூலம் அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்தத்தில் 'சிவ சிவ' என்ற முழக்கத்துடன் புனித நீராடினர்.அமாவாசையை முன்னிட்டு, காலை 11:00 மணிக்கு மேல் கோவிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்திலும், ராமர், சீதை, லட்சுமணர், ஹனுமன் தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.பின், கோவில் வளாகத்தில் உள்ள, 22 தீர்த்தங்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். சுவாமி, அம்மன் சன்னிதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை