மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
24-Nov-2024
பரமக்குடி: பரமக்குடி ஐயப்பன் கோயிலில் தர்ம சாஸ்தா, பூரண புஷ்கலா தேவி திருக்கல்யாணம் டிச.25ல் நடக்கிறது. கேரள மாநிலம் ஆரியங்காவு தர்ம சாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணம் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடக்கிறது. இதன்படி தர்மசாஸ்தா சபரிமலையில் சன்னியாசியாகவும், குளத்துப்புழையில் பாலகனாகவும், ஆரியங்காவில் திருமணகோலத்தில், அச்சன்கோவிலில் வன அரசராகவும் அருள் பாலிக்கிறார். ஆரியங்காவில் அன்னதான பிரபுவாக உள்ள தர்மசாஸ்தா புஷ்கலா தேவியின் பக்திக்கு இணங்கி அவரை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டதாக ஐதீகம் உள்ளது.புஷ்கலா சவுராஷ்டிரா குல தேவி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் திருமண சடங்குகள் சவுராஷ்டிரா குல வழக்கப்படி நடக்கிறது.இந்நிலையில் பரமக்குடி தரைப்பாலம் அருகில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தர்ம சாஸ்தா, ஸ்ரீ பூரண புஷ்கலா தேவி திருக்கல்யாணம் 14-வது ஆண்டாக நடக்க உள்ளது. டிச.24 இரவு 7:00 மணிக்கு நிச்சயதார்த்த வைபவம் நடக்கிறது.டிச.25 காலை பெண் வீட்டார் அழைப்பு, மாலை மாற்றுதல் தொடர்ந்து காலை 9:30 மணி முதல் 11:00 மணிக்குள் சரண கோஷத்துடன் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. பின்னர் அன்னதானம் மற்றும் இரவு கஜ வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் தர்ம சாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
24-Nov-2024