சேதமடைந்த ரோட்டை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தினமலர் செய்தி எதிரொலி
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவனுார் மேம்பாலம் பகுதியில் சேதமடைந்த ரோட்டினை தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மணல் மூடைகளை அடுக்கி சீரமைத்துஉள்ளனர்.ராமநாதபுரம் இடையர்வலசை முதல் நயினார்கோவில் ரோட்டில் உள்ள தொருவளூர் வரையிலானரோட்டினை 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் பணிகள் ரூ.48 கோடியில் 5கி.மீ., சாலைப்பணிகள் அமைக்கும் பணியும், காவனுார், தொருவளூர் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து அந்தப்பகுதயில் தார் ரோடுகள் அமைக்கப்பட்டது. 10 நாட்களுக்குள் கன மழை காரணமாக சாலையின் பக்கவாட்டுப்பகுதியில் பாலம் உயரத்திற்கு போடப்பட்டிருந்த கிராவல் மணல் அரிப்பு ஏற்பட்டு ரோடு பாளம், பாளமாக வெடித்தது. ரோடுகள் சேதமடையும் நிலையில் இருந்தது இதுகுறித்து தினமலர்நாளிதழில் நேற்று செய்தி படத்துடன் வெளியானது.இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை மதுரை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், ராமநாதபுரம் கோட்ட பொறியாளர் முருகன், மற்றும் உதவி பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரோடுகளில் சேதமடைந்த பகுதிகளில் மணல் மூடைகளை அடுக்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.