உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குரூப்–4 தேர்விற்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு

குரூப்–4 தேர்விற்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு

ராமநாதபுரம்: ராமாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்–4 தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் அக்.,23 முதல் வார நாட்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்–4 தேர்விற்கான அறிவிப்பு அக்.,6 ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6574 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.,5 கடைசி நாள். தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு ராமாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்–4 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் அக்.,23 முதல் வார நாட்களில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு நேரில், அல்லது 94439 92758, 7789 70857 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.––––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !