உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான அடைவுத் தேர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான அடைவுத் தேர்வு

திருவாடானை: திருவாடானை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கான அடைவுத் தேர்வு 72 மையங்களில் நடந்தது.எழுதப்படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதியபாரத திட்டம் செயல்படுகிறது. நேற்று திருவாடானை ஒன்றியத்தில் நடந்த தேர்வில் 814 பெண்கள் உள்ளிட்ட 881 பங்கேற்றனர். கண்காணிப்பாளர்களாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னார்வலர்கள் செயல்பட்டனர். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், வட்டார கல்வி அலுவலர் புல்லாணி பார்வையிட்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ