மேலும் செய்திகள்
ரூ.6 கோடி கஞ்சா இலங்கையில் பறிமுதல்
19-Sep-2025
ராமேஸ்வரம்:இலங்கை டு தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி, மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை படைத்தார். சென்னையை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மகன் புவி ஆற்றல், 12. இவர், சென்னை அகாடமியில் நீச்சல் பயிற்சி பெற்று, 2024ல் கோவாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில், 3 பிரிவில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றார். தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்ற சிறுவன், சவாலான பாக் ஜலசந்தி கடலில் நீந்தி சாதிக்க முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம், சிறுவன் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் இலங்கை சென்றார். நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு இலங்கை தலைமன்னார் கடலில் குதித்து நீந்த துவங்கினார். அவ்வப்போது, சிறிது நேர ஓய்வுக்கு பின், தொடர்ந்து நீந்திய சிறுவன், நேற்று மதியம், 12:00 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தார். மொத்தம், 28 கி.மீ., துாரத்தை, 9 மணி 15 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார். சிறுவனை உறவினர்கள், இந்திய, இலங்கை நீச்சல் வீரர்கள் வழிகாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ரோஜர் வரவேற்றனர்.
19-Sep-2025