மேலும் செய்திகள்
ஆண்டு விழா
25-Feb-2025
ராமநாதபுரம் : சிவகங்கை தொல்நடைக்குழுவின் ஓய்வு பெற்ற தோட்டக்கலை உதவி இயக்குநர் இளங்கோவன் குல தெய்வக் கோயிலில் கல்வெட்டு இருப்பதாக கூறியதால் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனுாரில் மதுரை வீரன்சாமி கோயிலில் உள்ள கல்வெட்டு 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி காலத்தில் அவர் பெயர் குறிப்பிட்டுள்ள கல்வெட்டு என்பது தெரிய வந்தது.கல்வெட்டில் எழுத்து உள்ள பகுதி துண்டாக உடைந்து கிடக்கிறது. பின் பகுதியும் அதன் அருகிலேயே கிடக்கிறது. இக்கல்வெட்டு ஒன்றரை அடி உயரத்தில் ஒரு அடி அகலத்தில் 16 வரிகள் உள்ளன. ஊர் மக்கள் இக்கோயிலை ஊர்காவலன் என்று வணங்குகின்றனர்.
25-Feb-2025