உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

ராமநாதபுரம் : கழுகூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது. ராமநாதபுரம் கழு கூருணி ஊராட்சியில் ரூ.1.57 லட்சத்தில் குடிநீர் தொட்டி அமைத்து குழாய் பதிக்கப்பட்டது. இதன் மூலம் அந்தப் பகுதிக்கு நேரடியாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் குடிநீர் டேங், குழாய்கள் சேதமடைந்துள்ளன. அப்பகுதி மக்கள் கூறியதாவது: தண்ணீர் டேங் வைத்து சில மாதம் அதில் லாரியில் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பினர். அதன்பின் அங்குள்ள தண்ணீர் குழாய் சேதமடைந்ததால் தண்ணீர் நிரப்புவதை நிறுத்தி விட்டனர். உடைந்த குழாயை சரி செய்யாமல் தண்ணீரை நிறுத்தி விட்டனர். தற்போது 4 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை தெருவில் உள்ள குழாய் வழியாக தண்ணீர் விடுகின்றனர். அவசர தேவைக்கு தண்ணீர் எடுக்க தொலைதுாரம் செல்ல வேண்டியுள்ளது. குடிநீர் டேங்கை சரி செய்து அதில் தண்ணீர் நிரப்பினால் குடிநீருக்காக காத்திருக்க வேண்டிய நிலை இல்லை. அதை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ