உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட  அளவிலான தடகளப்போட்டி

பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட  அளவிலான தடகளப்போட்டி

ராமநாதபுரம்: பள்ளிக் கல்வித் துறை சார்பில் ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான தடகளப்போட்டிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. எட்டு குறுவட்ட அளவிலான போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 114 பள்ளிகளை சேர்ந்த 486 மாணவர்கள் பங்கேற்கின்றனர். நேற்று மாணவர்களுக்கான தடகளப்போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளி) ஜெயந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேணி ரெத்தினம் வரவேற்றார். இதில் 14, 17, 19 வயது பிரிவுகளில் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், கோலுான்றி உயரம் தாண்டுதல், தட்டு, குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், மகாலிங்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி