உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்ட அளவில் கபடி போட்டி

மாவட்ட அளவில் கபடி போட்டி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி கிராமத்தில் அரசரடியான் செவன்ஸ் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.ராமநாதபுரம், மதுரை, துாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். போட்டியில் புரோ கபடி விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. போட்டியை வெங்கலக்குறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.வெங்கலக்குறிச்சி அரசரடியான் செவன்ஸ் முதல் பரிசும், முத்துராமலிங்கபுரம்பட்டி அணி இரண்டாம் பரிசும், மேல்மாந்தை அணி மூன்றாம் பரிசும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெங்கலக்குறிச்சி அரசரடியான் செவன்ஸ் அணியினர், கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி