ரெகுநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம்
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தென்னை சாகுபடியில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாஸ்கர மணியன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஆறுமுகம் வரவேற்றார். வேளாண் துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன், விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா, வேளாண் இணை இயக்குனர் அமர்லால், வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் பங்கேற்றனர்.தென்னை சாகுபடியில் தொழில் நுட்பங்கள் பற்றியும், இணை பேராசிரியர் ராம்குமார் தென்னை ரூகோஸ் வெள்ளை கட்டுப்பாடு முறைகள் குறித்தும், இணை பேராசிரியர் விஜயகுமார், தென்னையில் மதிப்பு கூட்டுதல் குறித்தும், நயினாமரைக்கான் முன்னோடி விவசாயி முருகன் தென்னை சாகுபடியின் அனுபவம் பற்றியும் விளக்கி கூறினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் பவானி நன்றி கூறினார்.ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். தென்னந்தோப்புக்கு சென்று செயல் விளக்க முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.