உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீபாவளி தொகுப்பு வழங்கல்

தீபாவளி தொகுப்பு வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாய் பாசம் அறக்கட்டளை சார்பில் 7ம் ஆண்டு தீபாவளி அன்பளிப்பு தொகுப்பு வழங்கும் விழா ராமநாதபுரம் அருப்புக்காரத்தெரு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடந்தது. தாய் பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமது வரவேற்றார். தீபாவளி அன்பளிப்பு தொகுப்புகளை காங்., மாவட்ட பொறுப்பாளர் ராஜாராம் பாண்டியன், இளையான்குடி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது இலியாஸ், கிரசண்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஹாஜி அப்தாஹிர், ரோட்டரி கிளப் நிர்வாகி நாசர், ஜும்மா பள்ளி செயலாளர் சீனி இப்ராஹீம், பள்ளி தலைமை இமாம் முகமது அலி ஜின்னா ஆகியோர் வழங்கினர். ஏராளமானோர் தீபாவளி தொகுப்புகளை பெற்றனர். எம்.ஒய்.எப்.ஏ., சங்க பொதுச் செயலாளர் ஆசிக் ரஹ்மான், சமூக ஆர்வலர் அப்துல் ஹமீது, பொறியாளர் அஜீஸ் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ