ஐயப்பன் கோயிலில் தீபாவளி சேவை விழா
ரெகுநாதபுரம் : -தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ராமநாதபுரத்தில் உள்ள அன்பு இல்லம் உள்ளிட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. கண்ணபிரான் வரவேற்றார். அறக்கட்டளையின் சேவைகள் பற்றி ராஜசேகர பாண்டியன் விளக்கி கூறினார். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவு கல்வி பரிசும், பாராட்டு சான்றிதழும் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் மோகன் சுவாமி மற்றும் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்தனர்.