தி.மு.க., கம்பத்தால் விபரீதம் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் இந்திரா நகரில் பாலா என்பவரது மீன் கம்பெனி லாரியில் கோபி, 31, என்பவர் டிரைவராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி 5 மாதங்கள்தான் ஆகிறது. நேற்று இரவு மீன் கம்பெனியில் லாரியை நிறுத்துவதற்காக, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து லாரியை பின்னோக்கி நகர்த்தி சென்றார்.அப்போது ரோட்டோரத்தில் லேசாக ஊன்றி இருந்த தி.மு.க., கொடிக்கம்பத்தில் கட்டியிருந்த இரும்பு கம்பி மீது லாரி டிரைவரின் கதவு மோதியது. இதில் கொடிக் கம்பி அறுந்து, அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. அந்த இரும்புக் கம்பி வழியாக லாரி டிரைவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார்.