உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெண்ணுக்கு தொந்தரவு தி.மு.க., பிரமுகர் தலைமறைவு

பெண்ணுக்கு தொந்தரவு தி.மு.க., பிரமுகர் தலைமறைவு

பெருநாழி:ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே வீரமச்சான் பட்டி கிராமத்தில் பாலியல் தொந்தரவு காரணமாக பெண் தற்கொலை செய்தார். இது தொடர்பாக தி.மு.க., பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர். வீரமாச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை 60. கமுதி தெற்கு ஒன்றிய தி.மு.க., விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் உறவு பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது தொந்தரவு அதிகமான நிலையில் நேற்று முன்தினம் மதியம் அந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று காலை உயிரிழந்தார். பாலியல் சீண்டல் வழக்கில் பெருநாழி போலீசார் அண்ணாதுரையை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி