உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடி கடலில் மீன் பிடிக்க வேண்டாம் * மீன்வளத்துறை எச்சரிக்கை

தனுஷ்கோடி கடலில் மீன் பிடிக்க வேண்டாம் * மீன்வளத்துறை எச்சரிக்கை

ராமேஸ்வரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மிதந்து வருவதால் கடலோர மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர்.மே 24ல் கொச்சின் அருகே லைபீரியா சரக்கு கப்பல் மூழ்கியது. இதனுள் இருந்த பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் மூடைகள் நேற்று முன்தினம் தனுஷ்கோடியில் ஒதுங்கின. மேலும் பல மூடைகள் உடைந்து ரசாயன மூலப்பொருட்கள் தனுஷ்கோடி கடற்கரையில் 5 கி.மீ.,க்கு பரவியுள்ளன. இதனை நேற்று ராமேஸ்வரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரித்து வாகனத்தில் எடுத்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தனுஷ்கோடி கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளது. *மீன் வளத்துறை எச்சரிக்கை :மீனவளத்துறை உதவி இயக்குனர் தமிழ் மாறன் கூறியுள்ளதாவது: டன் கணக்கில் ஒதுங்கும் இந்த மூலப்பொருட்களை மீன்கள் உட்கொள்ளும் சூழல் உள்ளதால் மன்னார் வளைகுடா கடலில் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இச்சூழலில் தனுஷ்கோடி, பாம்பன் நாட்டுப்படகு மற்றும் கரை வலையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மன்னார் வளைகுடா தென்பகுதி கடலோரத்தில் மீன்பிடிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ