உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திரவுபதி அம்மன் பூக்குழி விழா

திரவுபதி அம்மன் பூக்குழி விழா

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவம் நடந்தது.ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில் ஏப்.,7ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் பாரத கதைகள் படிக்கப்பட்டதுடன், பீம வேஷம் பல்வேறு கிராமங்களில் நிகழ்த்தப்பட்டது. அரவான் படுகளம், துரியோதனன் படுகளம், துரியோதனன் தபசு நிலை மற்றும் திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கரகம் எடுத்த பக்தர் உட்பட ஏராளமானவர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை பால்குடம், அபிஷேக ஆராதனைகள் நடந்து சுவாமி வீதி உலா, மஞ்சள் நீராட்டு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ