திரவுபதி அம்மன் கோயில் தவசு கடப்பலி நிகழ்வு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 25 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திருக்கல்யாணம், சக்ராபர்ண கோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப் படி நிகழ்வுகள் நடந்தன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று ஆவரேந்தல் கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக தபசு கடப்பலி நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மகாபாரத வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கப்பட்டன. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.