உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்களின் துாய்மைப் பணி முகாம் செப்., 26ல் துவங்கியது. 5ம் நாள் முகாமில் நேற்று அரசுப் பள்ளி வளாகத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடந்தது. போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள், போதை பழக்கத்தில் உள்ளவர்களை மீட்பது குறித்தும் துறைமுகம் போலீஸ் எஸ்.ஐ., வெள்ளத் தங்கம் விளக்கி பேசினார். மேலும் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பேனா வழங்கி பாராட்டினார். இதன் பின் ராமேஸ்வரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங், போக்குவரத்து விதிகள், அதனை பின்பற்றுவது குறித்தும் மாணவர்களுடன் பேசினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செல்வகுமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை