உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிழக்குக் கடற்கரை சாலை சேதம்: பயணிகள் பாதிப்பு

கிழக்குக் கடற்கரை சாலை சேதம்: பயணிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்; கிழக்குக் கடற்கரை சாலை ஏ.மணக்குடி, புதுப்பட்டினம், உப்பூர், சம்பை, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. வெளியூர் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.கிழக்குக் கடற்கரை சாலை வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், ஆங்காங்கே ரோட்டில் திடீரென குறிக்கிடும் பள்ளங்களால், சுற்றுலா வாகனங்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பிலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்திய நிலையிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை