உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் அக்.7 முதல் வேலை நிறுத்தம்

கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் அக்.7 முதல் வேலை நிறுத்தம்

ராமநாதபுரம்:முன் அறிவிப்பின்றி கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்த தென்காசி முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் நலச்சங்கம் சார்பில் அக்.,7 முதல் காலவரைற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர்.ராமநாதபுரத்தில் சங்க மாநிலத் தலைவர் பி.முனியேஸ்வரன் கூறியதாவது: பணி நியமனம் பெற்று 10 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு இல்லாத நிலையிலும், அரசு செயல்படுத்தி வரும் அனைத்து நலத் திட்டங்களையும் சேவை மனப்பான்மையுடன் அமைச்சுப் பணியாளர்கள் செய்து வருகிறோம்.அரசு வெளியிடும் ஆணைகளுக்கு முரணாக பணிகளில் இருக்கும் சில நடைமுறை சிக்கல்களை அதிகாரிகளிடம் எடுத்துரைத்த 3 பணியாளர்களை தென்காசி முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி சஸ்பெண்ட் செய்துள்ளார். இது தொடர்பாக செப்.30ல் முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க சென்ற போது வாங்கி கூட பார்க்காமல் அலட்சியமாக பேசினார். சஸ்பெண்ட் உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் அனைவரும் அக்.7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ