உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொலை குறித்து விசாரணை அவமானத்தில் முதியவர் தற்கொலை

கொலை குறித்து விசாரணை அவமானத்தில் முதியவர் தற்கொலை

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம்மண்டபம் முனைக்காடு பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் 62, அக்., 5 பால் விற்க சென்ற போது மர்மநபர்கள் அடித்து கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை திருடி சென்றனர். இதுகுறித்து மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய கோரி சில நாட்களுக்கு முன் பேச்சியம்மாளின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் அதே ஊரைச் சேர்ந்த பேச்சியம்மாளின் உறவினரான சின்னக்காஞ்சியை 65, நேற்று முன்தினம் மண்டபம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்து அனுப்பினர். இந்நிலையில் சின்னகாஞ்சி அவரது வீடு அருகில் உள்ள தோப்பில் மரத்தில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

எஸ்.பி.,யிடம் புகார்:

எஸ்.பி., சந்தீஷிடம் சின்னக்காஞ்சி மகள் முத்துக்கருப்பாயி கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: மூதாட்டி கொலையில் டிச., 20 தந்தை சின்னக்காஞ்சி மற்றும் எங்களை ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்று தரக்குறைவாக பேசினர்.தந்தையை தாக்கினர். டிச., 21, 22ல் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகி உடல் நலம் பாதித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.மீண்டும் டிச.,26 என் தந்தையை அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் தாக்கினர். இந்த மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி