தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கமுதி: கமுதி அருகே அபிராமம் பஸ் ஸ்டாண்டில் 100 சதவீதம் ஓட்டு அளிப்போம் என்ற தலைப்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் தலைமை வகித்தார். தாசில்தார் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் லலிதா வரவேற்றார். அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சைக்கிளில் வந்தனர். பின்பு கல்லூரி மாணவர்கள் தேர்தல் குறித்து நாடகம் விழிப்புணர்வு பாடல் மூலம் 100 சதவீதம் ஓட்டு அளிப்பது முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். விஜயபாண்டியன் சிலம்பாட்ட குழுவின் சார்பில் சிலம்பம், வாள்வீச்சு, புலியாட்டம், கட்டைக்கால் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்பு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் துணை தாசில்தார் கீதா,வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து பங்கேற்றனர்.