உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்வு

வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்வு

சாயல்குடி: சாயல்குடியில் வணிகர் சங்க பேரமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எம்.ரசூல் கான், செயலாளராக சிவசுப்பிரமணியன், பொருளாளராக பாபா குருசாமி, துணைத்தலைவராக காளீஸ்வரி, கருப்புசாமி, துணைச் செயலாளராக செந்தில்குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.முன்னாள் நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மூக்கையூர் செல்லும் சாயல்குடி மும்முனை சந்திப்பில் அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்துவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர் போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றனர்.எனவே போக்குவரத்து நெரிசல் மிக்க அப்பகுதியில் அரசியல் கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ