மேலும் செய்திகள்
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
11-Apr-2025
முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் ஒத்த வீடு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.கீழச்சாக்குளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. ஒத்த வீடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக குறைவழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் மாணவர்கள் படிக்க முடியாத நிலை தொடர்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு மின்கம்பம் உள்ளிட்ட தளவாட பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனால் தினந்தோறும் ஒத்தவீடு பகுதியில் மக்கள் குறைவழுத்த மின்சாரத்தால் இருளில் தவிக்கும் அவலநிலை உள்ளது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதுகுளத்துார் மின்வாரியத்துறையினர் வரத்து கால்வாய் அருகே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு ஒத்த வீடு பகுதிக்கு மின்சப்ளை வழங்கப்பட்டது.இருளில் தவித்த மக்களுக்கு மின்சாரம் வழங்க செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கும், மின்வாரிய பணியாளர்களுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
11-Apr-2025