மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர்கள் தர்ணா போராட்டம்
28-Mar-2025
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
16-Apr-2025
ராமநாதபுரம் : காலி பணியிடங்களை நிரப்பவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரியும் சி.ஐ.டி.யு., மத்திய மின் ஊழியர் அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. ராமநாதபுரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்திற்கு திட்டத்தலைவர் முருகன் தலைமை வகித்தார். கோரிக்கைளை விளக்கி சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, திட்ட செயலாளர் காசிநாதன் ஆகியோர் பேசினர்.மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஆர்.குருவேல் பேசினார். நிர்வாகி ஆரோக்கியம் நன்றி கூறினார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். இவற்றை மின்சார வாரிய மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
28-Mar-2025
16-Apr-2025