உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீர் ஊருணியை சுற்றிலும் வேலி அமைக்க வலியுறுத்தல்

குடிநீர் ஊருணியை சுற்றிலும் வேலி அமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : திருப்பாலைக்குடி பழங்கோட்டை குடிநீர் ஊருணியை சுற்றிலும் முள்வேலி அமைத்து குடிநீரை பாதுகாக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். திருப்பாலைக்குடியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடற்கரை கிராமம் என்பதால் நிலத்தடி நீர் உப்பு தன்மை வாய்ந்ததாக உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி கூட்டு குடிநீரும் முறையான சப்ளை இல்லை. இதனால் மக்கள் வெளியூர்களில் இருந்து டிராக்டர்களில் விற்கப்படும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். மேலும் பழங்கோட்டை பகுதியில் உள்ள ஊருணி நீரையும் குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தும் ஊருணியை சுற்றிலும் முறையான பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால் கால்நடைகளும், அவ்வழியாக செல்வோரும் குடிநீர் ஊருணியை அசுத்தம் செய்கின்றனர். இதனால் ஊருணி நீரை குடிநீராக பயன்படுத்தும் மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் ஊருணியை சுற்றிலும் முள்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ