உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் சமத்துவ பொங்கல் விழா

பரமக்குடியில் சமத்துவ பொங்கல் விழா

பரமக்குடி : பரமக்குடி உலகநாதபுரம் அருள் சான்று நிலையத்தில் ராமநாதபுரம் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாவட்டத் தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், இணைச் செயலாளர் சரத்பாபு முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் வரவேற்றார். தொடர்ந்து அருள் சான்று நிலையத்தில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து பரிமாறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !