உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செப்.30க்குள் வரி செலுத்த செயல் அலுவலர் உத்தரவு

செப்.30க்குள் வரி செலுத்த செயல் அலுவலர் உத்தரவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை அபராதம் இன்றி செப்.30க்குள் செலுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி அறிவித்துள்ளார்.ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கான 2024--25ம் நிதி ஆண்டிற்கான முதலாம் அரையாண்டுக்கான சொத்துவரியை தற்போது பேரூராட்சி நிர்வாகம் வசூல் செய்து வருகிறது.இந்நிலையில் முதலாம் அரையாண்டுக்கான தொகையை செலுத்தாமல் உள்ளவர்கள் செப்.30க்குள் அபராதம் இன்றி செலுத்த வேண்டும் என்றும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை 2026 மார்ச் 31 க்குள் கட்டி முடிக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை