பாம்பு கடித்து விவசாயி பலி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலச்சாக்குளம் சேர்ந்த சண்முகவேல் 50, விவசாய வேலை செய்து வந்தார். அப்போது நிலத்தில் இருந்த பாம்பு கடித்ததில் மயக்க மடைந்தார். முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சண்முகவேல் இறந்தார். முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்கு பதிந்துள்ளார்.